மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் பா.ஜ.க. நிர்வாகி நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று நாகர்கோவில் இடலாக்குடி சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் அமீர்கான் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் முஜிப் ரகுமான், சாதிக் அலி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story