ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை
இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பா.ஜ.க.வின் நுபுல்சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மயிலாடுதுறையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் சேக்அலாவுதீன் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாசித், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர் முபாரக் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நீடூர் கிளை பொறுப்பாளர் மிஸ்பா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story