ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

அருப்புக்ேகாட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை ஒன்றியப்பகுதிகளான பாளையம்பட்டி விரிவாக்க பகுதியில் மதுரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், குடிதண்ணீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு லீலாவதி மற்றும் ராமலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு பூங்கோதை, அர்ஜுனன், முத்துக்குமார், தாமஸ், கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story