பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

அருப்புக்கோட்டையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் செயல்பட்டுவந்த தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர், அதே கல்லூரியில் பயின்ற மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல் சாமி, மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் திலகபாமா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story