ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட தலைவர் காந்திமதி, துணை தலைவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊரக வேலை திட்டத்தை 150 நாட்களாக மாநில அரசு உயர்த்திட வேண்டும், தினக்கூலியை மாநில அரசு பங்காக 100 ரூபாய் சேர்த்து 381 ரூபாயாக உயர்த்தி முழுமையாக வழங்க வேண்டும், அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையான வேலை நாட்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story