ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

காரியாபட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி யூனியன் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைதிட்டத்தை 150 நாட்களாக உயா்த்த வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை காலையிலேயே புகைப்படம் எடுக்க கட்டாயப்படுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அன்புச்செல்வன், மார்க்கண்டேயன், பாலு, அயூப்கான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Next Story