ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் திருவுருவ படத்தை திறக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் திருவுருவ படத்தை திறக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடக்கத்தில் ஜவகர் மைதானம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய துறையை சேர்ந்தவர்கள், தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்கள், பொது மக்கள், பெண்கள் என திரளான பேர் கலந்து கொண்டனர். பி.எஸ். குமாரசாமி ராஜா திருவுருவ படத்தை சட்ட சபையில் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story