கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிராமிய அஞ்சல் ஊழியர்  சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர், அஞ்சல் துறையை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க கோரியும், நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்டத் தலைவர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பூராஜா, பொருளாளர் பட்டுராஜன், கிளை செயலாளர்கள் பிச்சையா, ராஜா மணி, கிளை தலைவர்கள் கணேசமூர்த்தி, மாரிக்கனி, பொருளாளர் பண்டாரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.


Next Story