காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரி, ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஆர்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியாகாந்திக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியதையடுத்து நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதன்படி கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு. துரைராஜ், அக.கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுக சுப்பிரமணி, நகர தலைவர் லலித் ஆண்டனி, கவுன்சிலர் விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

இதேபோன்று ஓசூர் ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வீர.முனிராஜ், நிர்வாகி பிரபாகர், மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயல் தலைவர் அசேன், நிர்வாகிகள் முத்தப்பா, சுரேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சோனியா காந்தியை விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கும் அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story