அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் எதிரில், மாவட்ட மைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் நடராஜன், நிர்வாகிகள் ஜெய்சங்கர், சரவணன், சிவலிங்கம், நந்தகுமார், பெருமாள், வெங்கடேசன், பி.எஸ்.என்.எல்.இ.யூ. மாநில உதவி செயலாளர் பாபு, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்கள். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் தினேஷ் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.