ராமநாதபுரத்தில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
x

ராமநாதபுரத்தில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைசெயலாளர் சுதீஷ் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரத்தில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் ஆணையாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர். தேர்தலின்போது மக்களுக்கு அறிவித்த திட்டங்களை ஒன்று கூட செயல்படுத்த முடியாமல் திணறும் தி.மு.க. அரசு மக்களின் அத்தியாவசிய தேவையான பால் விலை மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தற்போது தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வை மக்கள் தலையில் சுமத்தும் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. ராமநாதபுரம் நகர் செயலாளர் ராம்கி மற்றும் ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story