பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கிருஷ்ணகிரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சஞ்சார் நிகம் நிர்வாகிகள் சங்க மாவட்ட தலைவர் புஷோத்தமன், அகில இந்திய பட்டதாரி பொறியாளர்கள் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் சந்திரபாபு, பி.எஸ்.என்.எல். எம்ளாயிஸ் யூனியன் சங்க கிளை செயலாளர் நடராஜன், அனைந்திந்திய டாட் பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் சங்க கிளைத் தலைவர் சிவராஜ், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் கிளைத் தலைவர் சிவசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். அகில இந்திய பட்டதாரி பொறியாளர்கள் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்க மாவட்ட செயலர் பிரபாகரன், பி.எஸ்.என்.எல். எம்ளாயிஸ் யூனியன் சங்க மாவட்டத் தலைவர் பருதிவேல் ஆகியோர் பேசினர். பி.எஸ்.என்.எல்., எம்ளாயிஸ் யூனியன் சங்க கிளை உதவி செயலர் கபீர் அகமத் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story