தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் தலைமை தாங்கினார். தலைவர் ரோபி பிரபாகரன், பொருளாளர் மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், அல்லாபிச்சை, துணை செயலாளர் அர்ஜூனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் சங்கர், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் எம்.ஜாண், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் எல்.தங்கதுரை, காயல்பட்டினம் நகர அமைப்பாளர் மீரா சாகிப், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.மாரிச்செல்வம், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் பட்டுமாணிக்கம், தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட கொள்கை பரப்பு அமைப்பாளர் ஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருள்தாஸ், முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story