ஆர்ப்பாட்டம்
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் ராஜேஸ்வரி தலைமையிலும், செயலாளர் ரோஜா ரமணி, பொருளாளர் அமுதா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். முழு நேர ஊழியர்களாக்கி அனைத்து ஊழியர்களுக்கும் பயணப்படி, மருத்துவ உபகரண பராமரிப்பு வழங்க வேண்டும். ஊதியத்தை மாதம் 5-ந் தேதிக்குள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். ஊதியத்தை கணக்கீடு செய்ய வருகை பதிவேடு தவிர இதர ஆவணங்களை தவிர்க்க வேண்டும். மலைப்பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு பயணப்படி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.