ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்க செயலாளர் முனியசாமி, ஆட்டோ சங்க தலைவர் ராஜாராம் ஆகியோர் தலைமை தாங்கினர். சுப்பிரமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை வட்டார செயலாளர் ஜீவா தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் சமுத்திரம், இக்பால், கூடலிங்கம் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.



Next Story