அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசலில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சிவகங்கை நகர் செயலாளர் ராஜா வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழகம் 52-வது இடத்தில் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக இருந்தது.
தற்போது வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என்று மக்களை வாட்டி வதைக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செயல்பட்ட திருமண உதவி திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி போன்ற பல்வேறு பயனுள்ள திட்டங்களை நிறுத்திவிட்டனர். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படும் வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என்று பேசினார்.
அகற்ற வேண்டும்
முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- விவசாயிகளுக்கு மின்சாரம் மிக அத்தியாவசியமானது. மின்சாரத்தில் கை வைத்த அரசை கண்டிப்பாக நாம் அகற்ற வேண்டும். அ.தி.மு.க. அரசு விவசாயத்தை பற்றி முழுமையாக தெரிந்த அரசு. நாம் கொண்டுவந்த பல திட்டங்களை அவர்கள் மூடி மறைத்து விட்டனர். அ.தி.மு.க. அரசு சோதனையான காலகட்டத்தில் முன்னுக்கு வந்த அரசு என்று பேசினார்.
இதில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், மாவட்ட அவை தலைவர் நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் இளங்கோவன், முன்னாள் நகர் சபை தலைவர் அர்ஜூனன், நகர் அவை தலைவர் பாண்டி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் செல்வமணி, கோபி, சிவாஜி, தசரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.