ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

சாதி ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனிச்சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் ஜெகன் தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி துணை செயலாளர் ஊமைத்துரை, ஆதி தமிழர் பேரவையின் மாவட்ட அமைப்பு செயலாளர் மைக்கேல், தேவேந்திர சமூக பாதுகாப்பு கூட்டமைப்பு தர்மராஜ் ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவஞானம், கனகராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முத்துக்கந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மாரியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ராமர், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story