அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க கோரியும் சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேர் போகி பாண்டி தலைமை தாங்கினார். சிவகங்கை நகர் செயலாளர் அன்புமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை செயலாளர் டேவிட் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
இதில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, முருகன், வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் குரு முருகானந்தம், வக்கீல் அன்பரசன், வெங்கடேஷ், இலக்கிய அணிசெயலாளர் உதயகுமார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் செந்தில்குமார், திரைப்பட இயக்குனர் புவியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.