தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், நீட் நுழைவு தேர்வை கைவிடக்கோரியும் சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம் முன்பாக கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில் குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
இதில், தமிழர் இயக்க தேசிய பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மாவட்ட அவை தலைவர் கணேசன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணி முத்து, சிவகங்கை நகரசபை தலைவர் துரை.ஆனந்த், பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story