பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

சேலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழை காக்கும் போராட்டம் என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழ் மொழியையும், தமிழர்களையும் தி.மு.க. அழிக்க நினைப்பதாக கூறியும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பார்வையாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ்மொழி கல்வியை முதன்மைப்படுத்த வேண்டும். பண்டைய நூல்களை புதுப்பிக்க வேண்டும். தொழில் கல்வி பாடங்களை தமிழில் படிக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story