ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நடராஜன், பொருளாளர் அன்புச்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர், நியாய விலைக் கடை விற்பனையாளர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட வேண்டும். கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் போது முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் என விவரம் எழுத இடம் இல்லாத நிலை உள்ளதால் அதை உடனடியாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story