சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

சேலத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம் கோட்டை மைதானத்தில் சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோவிந்தன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சேலம் மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும், சுமை தூக்கும் பணியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story