தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி சேலத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி சேலத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், வங்கி வேலை நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக அமல்படுத்த வேண்டும், வங்கிகளை ஏமாற்றும் பெருமுதலாளிகளின் வாராக்கடனை வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் சேலத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை கனரா வங்கி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் குணாளன் தலைமை தாங்கினார்.
மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சம்பத், துணைத்தலைவர் மீனாட்சி, இணை செயலாளர் விமல்ராஜ் உள்பட பல்வேறு வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story