எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க. அரசின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை
இளையான்குடி,
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க. அரசின் ஹிந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இளையான்குடி பஜார் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் காதர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் முஜிபுர் ரகுமான் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜமீல், விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜேம்ஸ் வளவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முடிவில் நகர துணை செயலாளர் முகமது அசார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story