முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:46 PM GMT)

கிருஷ்ணகிரியில் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் நூர்முகமத் தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சல்மான் வரவேற்றார். மேற்கு மாவட்ட தலைவர் ஜாகீர்ஆலம், த.மு.மு.க. மாநில செயலாளர் முஸ்தாக்தீன் ஆகியோர் பேசினார். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வாஹித்பாஷா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஏஜாஸ்கான், ம.ம.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜுபையர், த.மு.மு.க. மாவட்ட பொருளாளர்கள் சலீம், தாஜுதீன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட தலைவர் சனாவுல்லா மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story