தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி, திருப்புவனத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

திருப்புவனம்,

இளையான்குடி, திருப்புவனத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்புவனம் சந்தை திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர் செயலாளர் நாகரெத்தினம் தலைமை தாங்கினார்.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சோனைரவி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர் அவை தலைவர் கோட்டைச்சாமி நன்றி கூறினார்.

இளையான்குடி

இளையான்குடியில் தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து பேரூராட்சி17-வது வார்டு கவுன்சிலர், பேரூர் செயலாளர் நாகூர் மீரா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு விரோதமாக மின் கட்டணம், வீட்டு வரி, பால், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்வை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் குருசேகரன், விமல் நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் அப்துல் குலாம், மாவட்ட பொருளாளர் ரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஸ்வரன், கோபி, பாரதிராஜன் ஆகியோர் பேசினர்.

ஆர்பாட்டத்தின்போது தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதில் அவை தலைவர் அபூபக்கர், பொருளாளர் அப்பாஸ் அலி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்யதுஇப்ராஹிம், செல்வம், தங்கராஜ், அபுதாகிர், அலி அக்பர், தங்க ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story