அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாடானையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொண்டி,
தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் திருவாடானையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கே.சி. ஆனிமுத்து தலைமை தாங்கினார். திருவாடானை ஒன்றிய செயலாளர் மதிவாணன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை நகர செயலாளர் ராமநாதன் வரவேற்றார். இதில் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பவுல் மெல்கியூர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஒடவயல் ராமசுப்பு, தொண்டி இ.எம்.எஸ். சாகுல் ஹமீது, பேரூராட்சி கவுன்சிலர் பார்த்திபன், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அவைத்தலைவர் திருமலை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் களக்குடி ராஜா, நகர் செயலாளர்கள் தொண்டி காளிதாஸ், ஆர்.எஸ். மங்கலம் குட்லக் ரஹ்மத்துல்லா, திருவெற்றியூர் கூட்டுறவு சங்க தலைவர் அமராவதி ராஜேந்திரன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ராம்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சிறுகம்பையூர் சிவா, சசிகுமார், ஒன்றிய துணை செயலாளர் கடம்பூர் காசி ராமு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சண்முகம், மகாலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் தளிர் மருங்கூர் சரவணன், பாண்டுகுடி பாலு, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் காளை, அழகர், பாரனூர் கருப்பையா, முன்னாள் ஊராட்சி செயலாளர் நாகரத்தினம், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருவாடானை நகர செயலாளர் ராமநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.