விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் சிவகங்கை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதில், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நகர் செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவராஜ், சிவகங்கை யூனியன் துணை தலைவர் கேசவன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் கோட்டையன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், அசோக் குமார், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல இணை செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர் அவை தலைவர் வி.ஆர். பாண்டி, நகர் துணை செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுைர, இளையான்குடி
அதேபோல் மானாமதுரை யூனியன் அலுவலகம் முன்பு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் சிவசிவஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். இதில் மாவட்ட கவுன்சிலர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப மண்டல தலைவர் தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சின்னைமாரியப்பன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் புரட்சி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.
இளையான்குடியில் தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், முன்னாள் நகர் செயலாளர் அப்துல் குலாம், மாவட்ட பொருளாளர் ரத்தினம், ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன், கோபி, பேரூர் செயலாளர் நாகூர் மீரா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இதில், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சிறுபாலை மலைச்சாமி, சாலைக்கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், ஒன்றிய அவை தலைவர் குருசேகரன், வக்கீல் முத்துச்சாமி, மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரி, மாதவன், குழந்தை, குமார், செல்வராஜ், சுகுமார், திருவள்ளூர் காஜா, அமானுல்லா மற்றும் நிர்வாகிகள் அபூபக்கர், அப்பாஸ் அலி, தாஜ் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விமல் நாகராஜன் நன்றி கூறினார்.