அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சாக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதுவயல் பஸ் நிலையம் அருகில், தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மாசான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன் ஆகியோர் பேசினர்.

இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் வீரசேகர், கிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர்கள் முருகையா, கருப்பையா, மாத்தூர் கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் முகமது அலி ஜின்னா, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுரேஷ், புதுவயல் பேரூர் துணை செயலாளர் ஆனந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், சுப்பிரமணியன், தேவி மீனாள், தமிழ்ச்செல்வி, ஐ.டி.விங் செயலாளர் பிரகாஷ், அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.புதூர், எஸ்.வி.மங்கலம்

அதேபோல் அ.தி.மு.க. சார்பில் எஸ்.புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பையா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கண்டன உரை நிகழ்த்தினார். இதில் எஸ்.புதூர் ஒன்றிய சேர்மன் விஜயா குமரன், துணை சேர்மன் வீரம்மாள் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் சின்னம்மாள் மென்னன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி தெற்கு ஒன்றியத்தில் உள்ள எஸ்.வி.மங்கலம் கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி நகர செயலாளர் வாசு, தெற்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெகன், ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு, மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகர துணை செயலாளர் குணசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சருகணியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் கலந்து கொண்டு பேசினார். இதில், ஒன்றிய செயலாளர்கள் வடக்கு பெருவத்தி முருகன், தெற்கு தசரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story