குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
சேலம் மாநகரில் குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு விடும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகராஜா கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story