சேலத்தில் கரும்புகளை ஏந்தி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் கரும்புகளை ஏந்தி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்கக்கோரி சேலத்தில் கரும்புகளை ஏந்தி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வழங்கக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் சேலத்தில் பா.ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட விவசாய அணி தலைவர் பூபாலன், மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், துணைத்தலைவர் செல்வராஜ், மகளிர் அணி நிர்வாகி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோஷம்

அப்போது அவர்கள் கைகளில் கரும்புகளை ஏந்தியவாறு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்கக்கோரியும், விவசாயிகளை தி.மு.க. அரசு வஞ்சிப்பதாக கூறியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும், விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்து அவற்றை பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.


Next Story