2 கிராம ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்


2 கிராம ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம்
x

2 கிராம ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே டொக்குபோதன அள்ளி மற்றும் சாமிசெட்டிப்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி புரட்சிகர சோசலிஸ்டு கட்சி சார்பில், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகம் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில் டொக்குபோதனஅள்ளி மற்றும் சாமிசெட்டிப்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளில் நிர்வாக சீர்கேடுகள் நடைபெறுவதாக கூறி அதை கண்டித்தும், இந்த இரு கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்ட வசதி, சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மணி, மாதேஷ், ஆறுமுகம் உள்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story