சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2023 12:15 AM IST (Updated: 4 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் அய்யாதுரை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சந்தானம், மாவட்ட பொருளாளர் முத்துவிஜயன், கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் முரளி, லோடுமேன் சங்க மாவட்ட தலைவர் பூமிநாதன், தனியார் மோட்டார் வாகன சங்க தலைவர் மணிகண்ணு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆய்வு என்ற பெயரில் ஓய்வூதியத்தை நிறுத்தி வைப்பதை நிறுத்த வேண்டும், அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக உயர்த்தி வழங்க வேண்டும், மரணம் அடைந்தால் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்்பாட்டம் நடந்தது. இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் சுடலைகாசி, பாஸ்கரன், பிரான்சிஸ், தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில், தையல் சங்க மாவட்ட செயலாளர் ஞானசேகர் நன்றி கூறினார்.


Next Story