ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தேவா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விசாரணை என்ற பெயரில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை நிறுத்தக்கூடாது. பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொங்கல் நிதி ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரிய பண பயன்களை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story