ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் வைப்பாற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக்கோரி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், நகர தலைவர் அய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் சந்திரன், கிழக்கு வட்டார தலைவர் இருக்கன்குடி சுப்பையா, மேற்கு வட்டார தலைவர் கார்த்திக் பொதுக்குழு உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தூர் வைப்பாற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story