கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்க பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரையா முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் மேல்நிலை தொட்டியில் அசிங்கம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரபாண்டி, மாவட்ட செயலாளர் மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் மதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் அழகர்சாமி ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், அண்ணாதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.