த.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


த.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே த.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஒப்பனையாள்புரம் காலனி குடியிருப்பு பகுதியில் சுடுகாடு அமைவதை வருவாய்த்துறையினர் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மண்டல செயலாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், ஊர் நாட்டாண்மைகள் பொன்ராஜ், காளிராஜ், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாடசாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் நெல்லையப்பன், சண்முகசுதாகர், தலைமை நிலைய செயலாளர் சேகர், மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, பொருளாளர் வெள்ளத்துரை ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், மாவட்ட இணை செயலாளர் கோபி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பெரியசாமி, இணைச்செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, இன்பராஜ், சந்தன மாரியப்பன், வேல்முருகன், பெரிய துரை, மங்களராஜ், ராஜ்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.


Next Story