முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும், கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றும் வகையில் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், சந்தை வியாபாரத்தை தனியாரிடம் குத்தகை கொடுக்காமல் உள்ளாட்சி அமைப்புகளே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ேகாரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துவிஜயன் தலைமை தாங்கினார். சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் ராமு, செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் ஆலடீஸ்வரன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சந்தானம், மாவட்ட துணை தலைவர் குருவேல், உள்ளாட்சி துறை சங்க மாவட்ட செயலாளர் அய்யாத்துரை, கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் வாசு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில், ஏராளமான முறைசாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.