புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சி சார்பில், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்தவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். துணைசெயலாளர் காவேரி முருகன், இளைஞரணி செயலாளர் அர்ஜூன், களக்காடு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலாஜி, ஒன்றிய மகளிரணி செயலாளர் கனகராணி, களக்காடு நகர செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் ரேணுகா வரவேற்றார். இதில் திருவாவடுதுறை ஆதீன குத்தகை விவசாயிகள் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு சங்க தலைவர் டாக்டர் பகத்சிங் முகமது, திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின்கென்னடி, மக்கள் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் கபிலன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story