ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம்: காரைக்குடியில், கவர்னரை கண்டித்து கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் சூதாட்ட தடைக்கான மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னரை கண்டித்து காரைக்குடி ஐந்து விலக்கு அருகே ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
ஆன்லைன் சூதாட்ட தடைக்கான மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னரை கண்டித்து காரைக்குடி ஐந்து விலக்கு அருகே ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் மீனாள் சேதுராமன், மாநில துணைச்செயலாளர் ராமச்சந்திரன், போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் மணவழகன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், நகரச்செயலாளர் வேலாயுதம், பொது சுகாதார தொழிலாளர் சங்க தலைவர் முருகன், செயலாளர் காமராஜ், ஆட்டோ சங்கர், நகர தலைவர் முத்தையா, செயலாளர் தங்கேஸ்வரன், நடைபாதை வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஒளி, ஒலி அமைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் முத்து சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சிவாஜி காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.