ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அருப்புக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி வழியாக மதுரை செல்லும் பஸ்கள் பந்தல்குடி ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதை கண்டித்தும் இந்த பஸ்கள் அனைத்தும் பந்தல்குடி ஊருக்குள் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள மதுரை போக்குவரத்து கழகம், நெல்லை போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பந்தல்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச்செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு சங்கர பாண்டி, ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.