அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணியம்மா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் முத்து கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.600 கேரள அரசாங்கம் வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், வேலை வழங்கும் காலத்தில் தினந்தோறும் ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும், தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவாக்கம் செய்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஆண்டி, உலகநாதன், ராஜூ, முத்து ராமலிங்கம், சாத்தப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.