ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

காங்கிரஸ் சார்பாக கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சாத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ் தலைமை வகித்தார். காங்கிரஸ் நகர தலைவர் அய்யப்பன், மாவட்ட செயலாளர் சந்திரன், கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாத்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்பாண்டி கண்டன உரையாற்றினர். இதில் சாத்தூர் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story