அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை

உசிலம்பட்டி,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், 5 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை பிரதான மையங்களோடு இணைக்க கோரியும், 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரியும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு உசிலம்பட்டி பகுதியில் உள்ள 128 மையங்களில் பணியாற்றும் 180-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று அடுத்தகட்ட போராட்டமாக அனைத்து பணியாளர்களும் விடுப்பு எடுக்கும் போராட்டத்திற்காக விடுப்பு எடுக்கும் விண்ணப்பத்தை வட்டார பொறுப்பாளரிடம் வழங்கினர்.

பேரையூர்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி பேரையூரில் உள்ள அங்கன்வாடி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும், ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதிய பணம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். இதில், ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story