பணி மாறுதலை ரத்து செய்யக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி மாறுதலை ரத்து செய்யக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
சிவகங்கை
விதிகளுக்கு புறம்பாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதலை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையிலும் மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப் ரோஸ், ஞான அற்புதராஜ், குமரேசன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாநில தலைவர் மணிமேகலை ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சேது செல்வம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சங்கர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.