ஆர்ப்பாட்டம்
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பாக 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன், பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். புதிய ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்கும் வகையில் ஊதியக்குழு அமைக்கப்பட்டு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story