காங்கிரஸ் வக்கீல் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் வக்கீல் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 April 2023 12:15 AM IST (Updated: 7 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் காங்கிரஸ் வக்கீல் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நீக்கம் செய்ததை கண்டித்து ராமநாதபுரம் காங்கிரஸ் வக்கீல் பிரிவு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவு வாயில் அருகாமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் அன்பு செழியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மூத்த வக்கீல்கள் இளமுருகன், கிருஷ்ணராஜ், சரவண காந்தி, ஹிமாயூன் பூட்டோ உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.


Next Story