சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகாய தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கணேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட துணை தலைவர்கள் முத்துலட்சுமி, வெங்கடேஷ், ஜோமில்டன், சாத்தையா, மாவட்ட இணை செயலாளர்கள் சுதா, சத்யா, சந்திரா ஆகியோர் பேசினர். இதில், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சோமசுந்தர், ராஜேந்திரன், சவுந்தர்ராஜன், விஜயகுமார், மூக்கூரான், கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி நன்றி கூறினார்.


Next Story