ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே அரசமலை கணேசபுரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத்தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட செயலாளர் ஏனாதி ஏ.எல்.ராசு ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நூறுநாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களின் வருகை பதிவேட்டினை காலை 9 மணி என மாற்றியமைக்க வேண்டும். பா.ஜ.க. அரசின் ஆன்லைன் வருகைப்பதிவேடு முறையை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story