ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் 8 மணி நேரம் வேலை உரிமையை தமிழக அரசு 12 மணி நேரம் என மாற்றி அமைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்றத்தில் தொழிற்சங்கங்களின் கருத்தை கேட்காமல் தொழிலாளர்கள் நலனை பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியதை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் முத்துமாரி, அமைப்பு செயலாளர் ரவி, நகர செயலாளர் விஜயன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் பகத்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story